அடுத்தடுத்து நான்கு எம்எல்ஏக்கள் பதவி விலகல்; எந்நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாயம்

அடுத்தடுத்து நான்கு எம்எல்ஏக்கள் பதவி விலகல்; எந்நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாயம்

2 mins read
172e4912-e896-410e-8e82-3a16a57a34d5
நால்வரில் ஆகக்கடைசியாக பதவி விலகிய ஜான் குமார் (வலது), மல்லாடி கிருஷ்ணாராவ். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

புதுச்­சேரி: புதுச்­சே­ரி­யில் ஆளும் காங்கிரஸ் கட்­சி­யைச் சேர்ந்த நான்கு எம்­எல்­ஏக்­கள் அடுத்­தடுத்து தொடர்ந்து ராஜி­னாமா செய்­துள்ளனர். ­

இந்த அதிரடி முடிவால் முதல்வர் நாரா­ய­ண­சாமி தலை­மை­யி­லான அரசு எந்நேரத்திலும் கவி­ழும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

முன்னதாக புதுச்சேரியில் நமச் சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை விட்டு விலகினர்.

இதையடுத்து, அ.ஜான்­குமார் எம்எல்ஏவும் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்திடம் அளித்தார்.

இந்நிலை­யில், நாரா­ய­ண­சாமி தலை­மை­யி­லான புதுவை அரசைக் கலைப்பதற்கு முடி­வு செய்துள்ள தாக புதுச்­சேரி சமூக நலத்­துறை அமைச்­சர் கந்­த­சாமி தெரி­வித்தார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் கந்தசாமி வெளி­யிட்­ட காணொ­ளி­யில், "புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை விட்டு விலக முடிவெடுத்துள்ளனர்.

"ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படு வதால் அமைச்சரவையை நாங்களே கலைத்துவிட திட்டமிட்டுள்ளோம்.

"பிர­த­மர் நரேந்­திர மோடியும் புதுச்­சேரி துணைநிலை ஆளு­நர் கிரண்­பே­டி­யும் கடந்த நான்­கரை ஆண்­டு­க­ளாக காங்­கி­ரஸ் அர­சிற்கு பெரும் தொல்லை கொடுத்து வரு­கின்­ற­னர். இன்­னும் இரண்டு வாரங்­களில் தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட உள்ள நிலை­யில், பொதுமக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களைப் பதவி விலக வைத்து, ஆட்­சியைக் கலைக்­கும் முயற்­சி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

"இதன்காரணமாக, முதல்­வர் நாரா­ய­ண­சாமி தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வையை முன்கூட்டியே கலைத்துவிட்டு மீண்­டும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்­கான வேலை­களில் ஈடுபட உள் ளோம்," என்று கூறியுள்­ளார்.

இதற்கிடையே, முதல்வர் நாரா யணசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

சட்­ட­ச­பை­யில் உள்ள 30 இடங்­களில் திமுக-காங்­கி­ரஸ் கட்­சி­யின் பலம் 19ஆக இருந்­தது. பாகூர் எம்­எல்ஏ தன­வே­லு தகுதிநீக்­கம் செய்­யப்பட்டதை அடுத்து ஆளும் கட்சி உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 18ஆக குறைந்தது.

இந்நிலை­யில், தற்­போது 14 எம்­எல்­ஏக்­கள் மட்­டுமே உள்­ள­தால் நாரா­ய­ண­சாமி அரசு கவி­ழும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.