இரண்டு முறை எம்எல்ஏ வாக இருந்த நன்மாறன் என்பவர், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
வயது மூப்பு, வறுமை காரணமாக சிரமப்பட்டு வரும் தனக்கும் தன் மனைவிக்கும் ஏழை மக்களுக்கு வழங்குவதைப் போலவே இலவச வீடு ஒன்றை வழங்கக் கோரி மதுரையில் டிஆர்ஓ செந்தில்குமாரியிடம் அவர் மனு அளித்துள்ளார்.
குடிைச மாற்று வாரியம் சார்பில் ராஜாக்கூரில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் ஒன்றைத் தங்களுக்குத் தருமாறு மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினரான நன்மாறன், 72, செந்தில்குமாரியிடம் மனு அளித்தார்.
மேடை கலைவாணர் என்ற அடைமொழியுடன் தமிழகத்தில் அறியப்பட்ட நன்மாறன், எம்எல்ஏ சம்பளம், ஓய்வூதியத்தைக் கட்சியின் விதிகள்படி கட்சியே எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கட்சி வழங்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
மகன்கள் குணசேகரன், ராஜ சேகரன் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். நன்மாறன் தனது மனைவியுடன் மேலப்பொன்னகரம் பிராட்வேயில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நன்மாறன் கூறுகையில், "ஏழை மக்களுக்கு வழங்குவது போன்று தமிழக அரசு எனக்கும் குடியிருக்க ராஜாக்கூரில் தரைதளத்தில் ஒரு வீடு ஒதுக்கித் தரும்படி மனு கொடுத்துள்ளேன்,'' என்றார்.

