தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது பிரசாரத்தால் தேர்தல் களத்தைத் தெறிக்க விட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா அறிவால யத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,450 பேர் திமுகவின் சார்பில் போட்டியிட குவிந்தனர்.
முதல் விருப்ப மனுவை மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கே.மலர் வாங்கினார்.
பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, தனித் தொகுதிக்கு ரூ.15,000 என விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும். ஒரு விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.1,000ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.