படை எடுத்து தமிழகத்துக்கு வரும் பாஜக தலைவர்கள்

தமிழ்­நாட்­டில் வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் எப்­ப­டி­யும் குறிப்­பி­டத்­தக்க இடத்­தைப் பிடித்து­விட வேண்­டும் என்று மத்­தி­யில் ஆளும் பாஜக கங்­க­ணம் கட்­டிக்­கொண்டு இருப்­ப­தாக கவ­னிப்­பாளர்­கள் கூறு­கி­றார்­கள்.

அதி­மு­க­வு­டன் கூட்டு சேர்ந்து தேர்­த­லைச் சந்­திக்­கப்போவ­தாக உறுதி அளித்து இருக்­கும் அந்­தக் கட்­சி­யின் முக்கியமான தலை­வர்­கள் ஒரு­வர் பின் ஒரு­வ­ராக விரை­வில் தமிழ்­நாட்­டுக்கு வந்து பல்­வேறு இடங்­க­ளி­லும் அர­சி­யல் கூட்­டங்­களி­லும் இதர பல நிகழ்ச்­சி­க­ளிலும் பங்­கெ­டுத்­துக் கொள்­ளப்போவ­தாக கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­து உள்­ளன.

பாஜக பிர­த­மர் நரேந்­திர மோடி சில நாட்­க­ளுக்கு முன் தமிழ்­நாடு வந்து பல்­வேறு நலத்­திட்­டங்­க­ளைத் தொடங்­கி­வைத்­தார்.

இந்த நிலை­யில், கோவை­யில் இம்­மா­தம் 25ஆம் தேதி நடக்­க­இருக்­கும் அதி­முக பிர­சார தொடக்கவிழா கூட்­டத்­தில் மோடி கலந்­து­கொள்­வார் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அவ­ரைத் தொடர்ந்து பாஜக தேசிய தலை­வ­ரும் உள்­துறை அமைச்­ச­ரு­மான அமித் ஷா பிப்­ர­வரி 28ஆம் தேதி நீல­கிரி அல்­லது விழுப்­பு­ரத்­தில் தேர்­தல் பிர­சார கூட்­டத்­தில் உரை­யாற்­று­கி­றார்.

இத­னி­டையே, இன்று நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் சென்னை வரு­கி­றார் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் நாளை தமி­ழ­கம் வரு­கி­றார் என்­றும் தொடர்ந்து பாஜ­க­வின் இதர தேசிய தலை­வர்­களும் தமி­ழ­கம் வரு­வார்­கள் என்­றும் கட்­சி­யினர் அறி­வித்­துள்­ள­னர்.

பாஜக தலை­வர் ஜே. பி. நட்டா மாநி­லத்­தில் தொடர்ந்து பல்­வேறு கூட்­டங்­க­ளி­லும் பங்­கெ­டுத்து வரு­கி­றார் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!