சேலத்தில் ஆசியாவின் ஆகப் பெரிய கால்நடை ஆய்வுப் பூங்கா: முதல்வர் திறந்து வைக்கிறார்

சேலத்தில் ஆசியாவின் ஆகப் பெரிய கால்நடை ஆய்வுப் பூங்கா: முதல்வர் திறந்து வைக்கிறார்

1 mins read
091e9ee8-aad7-4121-a652-ec02c2a81085
கோப்புப்படம்: ஊடகம் -

ஆசி­யா­வி­லேயே ஆகப் பெரிய ஒருங்­கி­ணைந்த கால்­நடை ஆய்­வுப் பூங்கா சேலத்­தில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதை தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி நாளை மறுநாள் திறந்துவைப்­பார் என்­றும் அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

சேலம் மாவட்­டம் தலை­வா­சல் அருகே ரூ.1,000 கோடி செல­வில் 1,100 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் அமைக்­கப்­பட்­டுள்ள அந்தப் பூங்­கா­வில், ரூ.118 கோடி மதிப்­பீட்­டில் 73.8 ஏக்­கர் பரப்­ப­ள­வில் தமி­ழ­கத்­தின் ஐந்­தா­வது கால்­நடை மருத்துவக் கல்­லூ­ரி­யும் அமைந்து இருக்­கும் என்று மாநில கால்­ந­டைத்­துறை அமைச்­சர் உடு­மலை ராதா­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

ஆய்­வுப் பூங்­கா­வைப் பார்­வை­யிட்ட அமைச்­சர், அங்கு மொத்­தம் 20 கட்­டடங்­கள் கட்­டப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவற்­றின் மொத்த பரப்பு 3.72 லட்­சம் சதுர அடி என்­றும் தெரி­வித்­தார்.

ஆய்வு மையம், கால்­நடைப் பூங்கா, கால்­நடை மருத்­து­வக்­கல்லூரி, கல்­வி­சார் அலு­வ­ல­கம், நூல­கக் கட்­ட­டம், மாணவ-மாணவி­கள் விடுதி, காப்­பா­ளர்­கள் கட்­ட­டம், விருந்­தி­னர் அலு­வ­ல­கம், கால்­நடை மருத்­து­வ­மனை, உண­வகம் முத­லான பல­வும் அவற்­றில் அடங்­கும் என்­றார் அமைச்­சர்.

காவிரி ஆற்­றி­லி­ருந்து தனி­யாக குழாய்­கள் பதிக்­கப்­பட்டு, கால்­ந­டைப் பூங்­கா­வுக்­குக் குடி­நீர் கொண்­டு­வர ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ள­தால் எப்போ­தும் தண்­ணீர் வசதி இருக்­கும்.

கால்­ந­டை­க­ளின் நல்­வாழ்­வை­யும் வளத்­தை­யும் பெருக்­கும் முயற்­சி­யாக தேனி­யில் 6வது கால்­நடை மருத்­து­வக் கல்­லூ­ரி­யும் உடு­ம­லை­யில் 7வது ­கல்­லூ­ரி­யும் திறக்­கப்­படும் என்றாரவர்.