ஏழு நாள்களே ஆன பெண் குழந்தையை கொன்ற பாட்டி கைது

ஏழு நாள்களே ஆன பெண் குழந்தையை கொன்ற பாட்டி கைது

2 mins read
bb7c9251-a565-445c-8507-39c384e1cff6
-

மதுரை: பிறந்து ஏழு நாள்களே ஆன பெண் குழந்தையை அந்தக் குழந்தையின் பாட்டியே மூச்சு திணறடித்துக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சியூட்டும் இந்தச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் பாட்டியை போலிசார் கைது செய்தனர்.

"மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் மிகுந்த வேதனை அடைந்தேன். இதனை வளர்த்து ஆளாக்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத்தான் தெரியும். அதனால்தான் பேத்தி என்றும் பாராமல் சிறு குழந்தை யிலேயே அதனைத் துணிந்து கொன்றேன்," என்று குழந்தையின் பாட்டி நாகம்மாள், 55, வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சி்னனச்சாமி-சிவபிரியா தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று, எட்டு என்ற வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவபிரியங்காவிற்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து ஏழு நாட்களே ஆன நிலையில், கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இரவில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக உசிலம் பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை இறந்தி ருந்தது தெரிந்தது.

குழந்தையின் உடல்கூறு பிரேதப் பரிசோதனை அறிக்கையில், செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுத்திணறலால் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

நாகம்மாளை விசாரித்ததில், முதல் இரு பெண் குழந்தைகளும் உடல் ஆரோக்கியம் இல்லாமல் குறைபாடுகளுடன் உள்ள நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரத்தில் குழந்தை யின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

என் மகனுக்கு ஆண் வாரிசு இன்றி மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. ஏழ்மை நிலையில் பெண் பிள்ளையை வளர்ப்பது சிரமம் என்பதால் விரக்தியில் குழந்தையின் பெற்றோருக்குத் தெரியாமல் கொலை செய்தேன்.

குழந்தையின் பாட்டி நாகம்மாள்