நார்ச்சத்து அதிகமுள்ள கறுப்பு கேரட்

நார்ச்சத்து அதிகமுள்ள கறுப்பு கேரட்

1 mins read
39704e64-f489-49fc-9af4-bc9a49d3fa5f
படம்: ஊடகம் -

கொடைக்கானல்: பொதுவாக கேரட்டுகள் ஆரஞ்சு வண்ணத்தில்தான் பார்த்திருப்போம்.

ஆனால், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேந்த ஆசீர் என்ற விவசாயி மலைக் காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றார்.

மற்ற கேரட்டுகளை விட கறுப்பு கேரட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது.

100 கிராம் கறுப்பு கேரட்டில் 36 கலோரிகள் மட்டுமே உள்ளன.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் இந்த கறுப்பு கேரட்டை சேர்த்துக் கொள்வது நல்லது.

இவை மற்ற கேரட்டுகளை விட அதிக சுவை கொண்ட கேரட்டாகும்.

கறுப்பு கேரட்டில் அதிகம் செறிவூட்டப்பட்ட அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமி அதிகமாக இருப்பதாலேயே அதன் வண்ணம் கறுப்பாக உள்ளது என்கிறார் விவசாயி ஆசீர்.