சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

1 mins read
b0c9d733-2407-4f90-8c37-b021fffaa47b
படம்: ஊடகம் -

மேட்டூர் அருகே சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. சேலம் மாவட்டம், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

சூறைக்காற்று காரணமாக மூலக்காடு, விராலிகாடு, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

கதலி, நேந்திரம், மொந்தம், பூவன் உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த வாழைகள் அதிக அளவில் சேதமடைந்தன. இதனால் தங்களுக்கு பல லட்ச ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். படம்: தமிழக ஊடகம்