சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பாட்டி, பேத்தி உடல்கள் மீட்பு; நால்வர் கைது

சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பாட்டி, பேத்தி உடல்கள் மீட்பு; நால்வர் கைது

1 mins read
dc9742ac-72fe-4f2b-ab3f-8e86dc28e13a
போலி­சாாின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில், பணத்­திற்­காக பாட்­டி­யும் பேத்தியும்­ கொலை செய்யப்­பட்­டி­ருப்­ப­து தெரிய வந்துள்ளது. படம்: ஊடகம் -

தென்­கா­சி­யில் கடந்த 45 நாட்­க­ளாக சுவ­ரொட்டி ஒட்டி தேடப்­பட்டு வந்த ஒரு ஒன்­றரை வயது குழந்­தை­யும் அதன் பாட்­டி­யும் சாக்­கு­மூட்­டைக்­குள் அழு­கிய நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்பட்­டுள்­ள­னர்.

வட்­டிக்கு கொடுத்த கடன் பணத்தை திருப்­பிக்கேட்டு தொந்தரவு கொடுத்த­தால், பேத்தி­ சாக்‌ஷியை­யும் பாட்­டி­ கோமதி அம்­மாளை­யும் நால்­வர் கொலை செய்து முட்­பு­த­ரில் வீசி­யது போலிஸ் விசா ரணையில் தெரியவந்தது.

நெஞ்சைப் பத­ற­வைக்­கும் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில், வீர­பாண்டி அம்­மாள், செல்­லப்பா, மகேஸ்­வரி, பூதத்­தான் ஆகிய நால்­வர் கைதாகி உள்­ள­னர்.

தென்­காசி, கீழப்­பு­லி­யூ­ரைச் சேர்ந்­த­வர் கோமதி அம்­மாள், 55.

தென்­காசி அருகே உள்ள வேட்­டைக்­கா­ரன்­கு­ளத்­தைச் சேர்ந்தவர் வீர­பாண்டி அம்­மா­ள், 55. இவர் கோமதி அம்­மா­ளி­டம் ரூ.20,000 கடன் வாங்கி உள்­ளார். அச­லுக்­கு­மேல் வட்டி கட்­டிய பிற­கும் வீர­பாண்டி அம்­மா­ளி­டம் பணத்தைத் திருப்பித் தரு­மாறு கோமதி அம்­மாள் அடிக்­கடி தொல்லை கொடுத்து வந்த­தாகவும் கூறப்­ப­டு­கிறது.

விசாரணை தொடர்கிறது.