உலக அளவில் செல்வாக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் முன்னேற்றம் காணும் என்றும் அதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சொற்குவை திட்டத்தின் மூலம் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், அகராதி உருவாக்கம், புதிய கலைச்சொற்கள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
"உலகளவில் பேசப்படும் மொழிகள் பற்றி யுனெஸ்கோ மேற்கொண்ட ஆய்வில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது," என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

