மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் ரத்தாகும்

ஈரோடு: திமுக ஆட்­சி­யில் இருந்­த­போ­தெல்­லாம் விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாது­காக்­கப்­பட்­ட­தாக அக்­கட்­சித் தலை­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

ஈரோடு மாவட்­டம் பெருந்­துறை­யில் நடை­பெற்ற விவ­சா­யி­கள் மாநாட்­டில் பேசிய அவர், நடப்­பு ஆட்­சி­யின் கடைசி நேரத்­தில் ஏற்­கப்­படும் அனைத்து ஒப்­பந்­தப்­புள்ளி­களும் அடுத்து திமுக ஆட்சி அமைந்த பின்­னர் உடனடியாக ரத்து செய்­யப்­படும் என்றார்.

விவ­சா­யி­கள் பிரச்­சி­னையை திசை­தி­ருப்­பும் வகை­யில் பிர­த­மர் மோடி செயல்­ப­டு­வ­தாக அவர் சாடி­னார்.

“புது­டெல்­லி­யில் 88 நாட்­க­ளாக விவ­சா­யி­கள் போராட்­டம் நடத்தி வரு­கி­றார்­கள். அதை திசை ­திருப்பு­கி­றார் பிர­த­மர் மோடி.

“தமி­ழ­கத்­துக்கு வந்­த­போது ‘வரப்­பு­யர நீர் உய­ரும்’ என்று அவ்­வை­யின் பாட­லைப் பாடி விவ­சா­யி­க­ளுக்கு செய்த பாவத்தை அவர் திசை திருப்­பப் பார்க்­கி­றார்,” என்­றார் ஸ்டா­லின்.

திமுக ஆட்­சிக்கு வந்­தால் விவ­சா­யி­க­ளுக்கு எதி­ரான மூன்று வேளாண் சட்­டங்­களும் ரத்து செய்­யப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், விவ­சாய விளை பொருட்­க­ளுக்கு குறைந்­த­பட்ச ஆதா­ர­விலை வழங்­கப்­படும் என்­றார்.

“திமுக ஆட்­சி­தான் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் கொடுத்­தது. அது அப்­ப­டியே தொட­ரும். விவ­சா­யி­கள் தொடர்­பான அனைத்து திட்­டங்­களும் அதி­கா­ரி­கள் மட்­டு­மின்றி, விவ­சா­யி­கள், விவ­சாய சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் கொண்ட குழு­வி­ன­ரு­டன் ஆலோ­சிக்­கப்­பட்ட பிறகே நிறை­வேற்­றப்­படும். தமிழக ஒப்­பந்­த­தா­ரர்­கள் யாரும் அதி­முக அமைச்­சர்­க­ளின் வாக்கு­று­தி­களை நம்பி ஒப்­பந்­தம் போட வேண்­டாம்,” என்றார் மு.க.ஸ்டாலின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!