எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை கட்சித் தலைமையகத்தில் அளித்து வருகின்றனர்.
தினமும் ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்றுச் செல்கின்றனர். சிலர் மேளதாளத்துடன் வந்து விருப்ப மனுக்களை அளித்தனர்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் விருப்ப மனுக்களைப் பெறவும் அளிக்கவும் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அலைமோதியது.

