சென்னை: தமிழக இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நேற்று காலை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின்னர், 11வது முறையாக வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், பள்ளிக்கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.34,181 கோடி ஒதுக்கீடு, காவல்துறையை நவீனமயப்படுத்தும் வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த நிதியமைச்சர், பெட்ரோல், டீசல் மீதான 'செஸ்' வரியைக் குறைக்க வும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
கோவையில் ரூ.6,683 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் 44 கிலோ மீட்டர் வரை அமைக்கப் படும் என்றும் சொன்னவர், திருமண நிதியுதவித் திட்டங்களின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.4,371 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
•கொரோனா முறியடிப்புக்கு ரூ.13,352 கோடி செலவு
•வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை
• குடும்பத் தலைவர் இயற்கை யாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை
• பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு
• புதிய பேருந்துகள் வாங்க ரூ.623 கோடி ஒதுக்கீடு
• வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி, மீன்வளத் துறைக்கு ரூ.580.97 கோடி ஒதுக்கீடு
•40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3,016 கோடி ஒதுக்கீடு
•வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலத்துடன் வீடு

