மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் இருந்து வருவோர் தமிழகத்தில் கட்டாயத் தனிமை

மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் கட்டாயமாக ஏழு நாள்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

அடுத்த ஏழு நாள்கள் அவர்கள் தங்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அக்காலகட்டத்தில் காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, 72 மணி நேரத்திற்குள் கொவிட்-19 பரிசோதனை செய்து, ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றால் மட்டுமே கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வருவோர்க்கு நுழைவு அனுமதி அளிக்கப்படும் என மேற்கு வங்க மாநிலம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருவோர் விரைவு பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதை டெல்லி, கர்நாடக மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.

கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 11,046,914 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்; 156,075 பேர் மரணமடைந்துவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!