தமிழக நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று டெல்லியில் அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. கேரள மாநிலத்தின் 140 தொகுதிகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
அசாமின் 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மார்ச் 27, ஏப்ரல் 2, ஏப்ரல் 6 என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும்.
மேற்கு வங்கத்தின் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் அந்த மாநிலத் தேர்தல் நடைபெறும். தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எச்.வசந்த குமார் மரணத்தால் காலியாக உள்ள கன்னியாகுமரி மக் களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021வாக்களிப்பு நாள்: ஏப்ரல் 6
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் நிறைவு: மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற
கடைசி நாள்: மார்ச் 22
வாக்கு எண்ணிக்கை: மே 2
மொத்த வாக்காளர்கள் 6.26 கோடி. ஆண்களைவிட பெண்
வாக்காளர்கள் 9.90 லட்சம் அதிகம்
மொத்த வாக்குச்சாவடிகள்: 88,936