105 வயது பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பிரதமர்

கோவை: அரசு விழா, பொதுக் கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக கடந்த 25ஆம் தேதி வியா­ழ­னன்று பிர­த­மர் நரேந்­திர மோடி கோயம்­புத்­தூர் வந்­தார்.

இந்த வரு­கை­யின்­போது, பாஜக தலை­வர்­கள், கூட்­டணி கட்­சித் தலை­வர்­கள், ஆட்­சி­யா­ளர்­கள் என முக்­கிய பெரும்­புள்­ளி­களை மட்­டும் சந்­தித்­து­விட்டு டெல்­லிக்­குத் திரும்பி வி­ட­வில்லை பிர­த­மர் மோடி.

மாறாக, அண்­மை­யில் மத்­திய அரசின் பத்­ம­ஸ்ரீ விரு­தைப் பெற்ற பாப்­பம்­மாள் பாட்டி­யை­யும் நேரில் சந்­தித்தார் பிர­த­மர் மோடி.

கோவை மாவட்­டம், மேட்­டுப்­பாளை­யம் அரு­கே­யுள்ள தேக்­கம் பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் பாப்­பம்­மாள், 105.

சுருங்­கிய தோலும் நரை­மு­டி­யு­மாகக் காட்சி தரும் பாப்­பம்­மாள் பாட்டி, சிறு வயது முதலே விவ­சா­யத்­தில் மிகுந்த ஆர்­வம் காட்டி வரு­கி­றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி யைச் சந்­திக்க தேர்தல் பிர­சா­ரக் கூட்­டம் நடைபெறும் கோவை கொடி­சியா அரங்­குக்கு வந்திருந்­தார். அங்கு மூதாட்டி பாப்­பம்­மா­ளைச் சந்­தித்த மோடி, அவரை கைகூப்பி வணங்­கி­னார்.

பாப்­பம்­மா­ளும் பிர­த­மர் மோடியை வணங்கி அவர் நீண்­ட­நாள் வாழ வேண்­டும் என்று வாழ்த்­தி­னார்.

இயற்கை விவ­சா­யம் குறித்து பாப்­பம்­மா­ளி­டம் கேட்டுத் தெரிந்து­கொண்ட பிரதமர் மோடி, இதனை தனது இன்ஸ்­டகி­ரா­மி­லும் பதிவு செய்­துள்­ளார்.

"கோவை­யில் இயற்கை விவ­சா­யத்­தில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் பாப்­பம்­மாளைச் சந்­தித்­தது மறக்­க­மு­டி­யா­தது," என்று அந்­தப் பதி­வில் பிர­த­மர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அத்­து­டன், இரு­வ­ரும் கைகூப்பி வணங்கும் புகைப்­ப­டத்­தை­யும் பிர­த­மர் தனது ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கிராம் பக்­கங்­களில் பகிர்ந்­துள்­ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமான உணவுப் பொருட் களை உற்பத்தி செய்து, அதை உண்டு ஆரோக்கியத்துடன் வாழும் பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அண்மையில் கௌரவித்திருந்தது மத்திய அரசு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!