3% வாக்குகளுடன் 3வது அணியா: கமல் பதில்

3% வாக்குகளுடன் 3வது அணியா: கமல் பதில்

1 mins read
4ab4349f-d6e8-4b1e-ae8d-265be7548a18
தமது அணியின் முதல்வர் வேட்பாளர் தாம் மட்டுமே என கமல் கூறி னார். அவருக்கு இடப்பக்கத்தில் பழ.கருப்பையா படம்: ஊடகம் -

மக்­கள் நீதி மய்­யம் (மநீம) கட்சித் தலைவர் கமல்­ஹா­சன் சென்னை ஆழ்­வார்­பேட்­டை­யிலுள்ள கட்சி அலு­வ­ல­கத்­தில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார். அப்­போது பேசிய அவர், "பழ.கருப்­பையா இன்று மநீம கட்­சி­யில் இணைந்­துள்­ளார். வெற்றி வேட்­பா­ள­ராக மநீம சார்­பில் தேர்­த­லி­லும் அவர் போட்­டி­யி­ட­வுள்­ளார்.

"சட்ட பஞ்­சா­யத்து இயக்­க­மும் மநீமவு­டன் இணைந்து தேர்­தல் களம் காண­வுள்­ளது. மநீம சார்­பில் போட்­டி­யிட ஏரா­ள­மான விருப்­ப­ம­னுக்­கள் குவிந்­துள்­ளன.

"தகு­தி­யான வேட்­பா­ள­ரைத் தேர்ந்­தெ­டுக்க எனது தலை­மை­யி­லான தேர்­வுக்­குழு மார்ச் 1ஆம் தேதி நேர்­கா­ண­லில் ஈடு­படும். மார்ச் 3ஆம் தேதி முதல் தேர்­தல் பிரசா­ரத்தைத் துவங்­க­வுள்­ளேன்.

"மார்ச் 7ஆம் தேதி முதல்­கட்ட வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யி­டப்­படும். 3% வாக்­கு­களை வைத்து மூன்­றா­வது அணியை அமைப்­பது வெற்­றிக்கு வழி­வ­குக்­குமா என்று கேட்­டால் நீங்­கள் சொல்­வது சரித்­தி­ரம், நான் சொல்­வது மாற்­றம் என்று நான் கூறு­வேன். சரித்­தி­ரம் நிகழ்ந்­து­விட்­டது, மாற்­றம் நிக­ழப்­போ­கிறது. யாரு­ட­னும் சம­ர­சம் செய்­து­கொள்­ளமாட்டோம். எங்­கள் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில் நான் முதல்­வர் வேட்­பா­ளர் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. எந்­தக் கட்­சிக்­கும் நாங்­கள் அழைப்பு விடுக்­க­வில்லை. எங்­க­ளின் கதவு திறந்­துள்­ளது. வர­வேற்க ஆயத்­த­மாக உள்­ளோம்," என்றார் கமல்.