மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்

மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்

1 mins read
6e98f7d5-571b-40ed-ab29-726f5f4813f6
மனைவி, மகளுடன் பாலுச்சாமி. கோப்புப் படம் -

மதுரை மாவட்­டம் பொய்­கைக்­க­ரைப்­பட்­டி­யைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலுச்­சாமி, 33, கடந்த புதன்­கி­ழமை சத்­தீஸ்­க­ரில் மாவோ­யிஸ்­டு­கள் வைத்த கண்­ணி­வெ­டி­யில் சிக்கி மர­ண­ம­டைந்­தார்.

இந்தோ-திபெத் எல்லை பாது­காப்புப் படை­யின் நக்­சல் தடுப்­புப் பிரி­வில் 14 ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி­வந்த இவ­ருக்கு ஈராண்­டு­க­ளுக்கு முன்பு திரு­ம­ணம் நடந்­தது.

ராம­லட்­சுமி, 26, என்ற மனை­வி­யும் 2 வயது குழந்­தை­யும் உள்­ள­னர்.

பாலு­சா­மி­யின் உடல் நேற்று முன்­தி­னம் அவ­ரது சொந்த ஊருக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

கிராமத்தினரும் அதி­கா­ரி­களும் அஞ்­சலி செலுத்­ திய பின்­னர் ஊர்­வ­ல­­மாக எடுத்­துச் செல்­லப்­பட்ட அவ­ரது உடல், ராணுவ மரி­யா­தை­யு­டன் 21 குண்­டு­கள் முழங்க அடக்­கம் செய்­யப்­பட்­டது.