சிம்ம சொப்பனமாக மிரட்டிய ராவணனை பாம்பு தீண்டியது

புதுக்­கோட்டை மாவட்­டம் நெம்­மே­லி­பட்­டி­யைச் சேர்ந்த காவல்­துறை துணை ஆய்­வா­ளர் அனு­ராதா வளர்த்து வந்த புகழ்­பெற்ற ராவ­ணன் என்று அழைக்­கப்­பட்ட ஜல்­லிக்­கட்­டுக் காளை உயி­ரி­ழந்­து­விட்­டது.

மாடு­பிடி வீரர்­க­ளுக்கு சிம்ம சொப்­ப­ன­மாக விளங்கி வந்த ராவ­ணன், பல ஜல்­லிக்­கட்டு போட்­டி­களில் வென்று பரி­சு­க­ளைப் பெற்­றது.

கடந்த வாரம் புதுக்­கோட்டை மாவட்­டம் கோவில்­பட்­டி­யில் நடை­பெற்ற ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­களில் பங்­கேற்ற ராவ­ணன், வீரர்­களை திண­ற­டித்து பிடி­ப­டா­மல் ஓடி­யது.

அப்­போ­தி­ருந்தே அந்த ஜல்­லிக்­கட்­டுக் காளையை காண­வில்லை. அனு­ரா­தா­வும் அவ­ரது சகோ­த­ரர் மாரி­முத்து உள்­ளிட்ட பல­ரும் ராவ­ண­னைத் தேடி­வந்­த­னர்.

தச்­சன்­கு­றிச்சி அருகே காளை நிற்­ப­தாக கிடைத்த தக­வ­லைத் தொடர்ந்து மாரி­முத்து அங்கு சென்றபோது காட்­டுப் பகு­தி­யில் பாம்பு புற்று ஒன்­றின் அரு­கில் ராவ­ணன் காளை இறந்த நிலை­யில் கிடந்­தது.

பாம்பு கொத்­தி­ய­தால் அது இறந்­த­தா­கத் தெரிய வந்­தது.

பாம்பு கடித்த உடனே ஆத்­தி­ரத்­தில் பாம்­புப் புற்றை அந்­தக் காளை முட்டி மோதி சேதப்­ப­டுத்­தி­யதை காண முடிந்­தது.

உட­லில் விஷம் ஏறி­ய­தால் புற்று அரு­கி­லேயே அது இறந்­து­விட்­டது.

ராவ­ணன் சடலத்தை அதன் உரி­மை­யா­ளர்­கள் லாரி­யில் ஏற்றி ஊர்­வ­ல­மாக தங்­கள் சொந்த ஊரான நெம்­மேலி பட்­டிக்­குக் கொண்டு சென்­ற­னர்.

மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அது அடக்கம் செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!