ராஜபாளையத்தில் கவுதமி: அதிமுகவினர் அதிர்ச்சி

ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவித்திருப்பது அதிமுக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையவில்லை.

இந்நிலையில் ராஜபாளையத்தில் பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் தொகுதி வேட்பாளரான கவுதமி வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

இவ்­வாறு அறி­விப்­பது கூட்­டணி தர்­மத்தை மீறிய செயல் என ராஜ­பா­ளை­யம் பகுதி அதி­மு­க­வி­னர் கூறி­யுள்­ள­னர்.

மேலும், அமைச்­சர் ராஜேந்­திர பாலாஜி இத்­தொ­கு­தி­யில் கள­மி­றங்க இருப்­ப­தா­க­வும் அதி­முக வட்­டா­ரங்­களில் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, சென்னை சேப்­பாக்­கம் தொகு­தி­யில் நடிகை குஷ்பு தீவிர பிர­சா­ரம் செய்து வரு­கி­றார். அவர் பாஜக சார்­பில் அங்கு கள­மி­றக்­கப்­ப­டு­வார் என ஒரு தக­வல் உலா வரு­கிறது.

இவ்­வாறு தொகு­திப் பங்­கீடு முடி­வ­டை­யும் முன்பே சில தொகு­தி­களை குறி­வைத்து பாஜக பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது சரி­யல்ல என்று அதி­முக தரப்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.