வாக்குக்கு பணம் தருவதை தடுக்க தயாராகும் 702 பறக்கும் படையினர்

சென்னை: தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வாக்­குக்கு பணம் கொடுப்­ப­தைத் தடுக்க ஒவ்­வொரு தொகு­திக்­கும் தலா மூன்று பறக்­கும் படை­கள் வீதம் மொத்­தம் 702 பறக்­கும் படை­யி­னர் தயா­ராகி வரு­ வ­தாக தலைமைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாகு கூறி­யுள்­ளார்.

தேர்­தல் சம­யத்­தில் போட்­டி­யி­டும் ஒவ்­வொரு கட்­சி­யி­ன­ரும் தங்­கள் கட்சி வெற்றி பெறு­வ­தற்­காக பணத்தை வாரி இறைக்­கும் போக்கு தென்­ப­டு­கிறது.

வாக்­கா­ளர்­களும் எந்­தக் கட்சி யினர் பணம் கொடுத்­தா­லும் அவர்­க­ளுக்கே வாக்­க­ளிப்­ப­தா­கக் கூறி பணத்தைப் பெறுகின்றனர்.

பெரும்­பா­லும் யார் அதிக அள­வில் பணத்­தைக் கொடுக்­கி­றார் களோ அவர்­க­ளுக்கே வாக்­க­ளித்து விடு­வ­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பணம் ஒரு­வ­ரின் வெற்றி, தோல்­வியை முடிவு செய்­வ­தைத் தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து சத்­ய­பி­ரதா சாகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "சட்­ட­மன்­றத் தேர்­தலை முன்­னிட்டு தமி­ழ­கத்­தில் பறக்­கும் படை, நிலை கண்­கா­ணிப்புக் குழு, காணொளி கண்­கா­ணிப்பு, பார்­வை­யி­டும் குழு, கணக்­கீட்­டுக் குழு ஆகி­யவை அமைக்­கப்­பட்டு உள்­ளன.

"வாக்­குக்கு பணம் கொடுப்­ப­தைத் தடுக்க பறக்­கும் படை, நிலை கண்­கா­ணிப்புக் குழு ஆகி­யவை ஒரு தொகு­திக்கு மூன்று குழுக்­கள் என்ற விகி­தத்­தில் அமைக்­கப்­பட்டு உள்­ளன. அதன்­படி 234 தொகுதிகளுக்­கும் தலா மூன்று பறக்­கும் படை­கள் என மொத்­தம் 702 பறக்­கும் படை­யி­னர் தயா­ராகி வரு­கின்­ற­னர். மற்ற குழுக்­கள் ஒரு தொகு­திக்கு ஒன்று என்­ற­ள­வில் அமைக்­கப்­பட்டு உள்­ளன," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!