ஏடிஎம் இயந்திரம் திருட்டு: ஆறு கொள்ளையர்கள் கைது

திருப்­பூர்: திருப்­பூ­ரில் காரில் கயிற்­றைக் கட்டி ஏடி­எம் இயந்­தி­ரத்தை பெயர்த்து எடுத்­துச் சென்ற கொள்ைளச் சம்­ப­வம் தொடர்­பாக வட மாநி­லத்­தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்த ஆறு கொள்­ளை­யர்­க­ளி­டம் இருந்­தும் கைத்­துப்­பாக்­கி­கள், ஒன்­பது தோட்­டாக்­கள், ரூ.69,000 ெராக்­கம், எரி­வா­யுத் தோம்பு உள்­ளிட்­ட­வற்றை போலி­சார் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

திருப்­பூர்-ஊத்­துக்­குளி சாலை, கூலிப்­பா­ளை­யம் நால்­ரோடு சந்­திப்­பில், பாங்க ஆப் பரோடா வங்­கி­யின் ஏடி­எம் செயல்­பட்டு வரு­கிறது. கடந்த ஞாயி­றன்று இந்த ஏடி­எம் இயந்­தி­ரத்தை காரில் கயிறு கட்டி பெயர்த்­துச் சென்­ற­னர். ஏ.டி.எம்.மில் ஒரு லட்­சத்து 100 ரூபாய் இருந்­தது.

திருட்­டுக்­குப் பயன்­ப­டுத்­திய கார், சரக்கு வாக­னம், ெபயர்த்து எடுத்­துச் செல்­லப்­பட்ட ஏடி­எம் இயந்­தி­ரத்­தின் உடைந்த பாகங்­கள் உள்­ளிட்­டவை ஈரோடு மாவட் டத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

இந்த சம்­ப­வம் தொடர்­பாக கருங்­கல்­பா­ளை­யம் பகு­தி­யில் சந்­தே­கத்­திற்கு இட­ம­ளிக்­கும் வித­மாக தங்­கி­யி­ருந்த சில­ரைப் பிடித்து விசா­ரித்­த­தில், அவர்­கள் ஏடி­எம் இயந்­தி­ரத்­தைக் கொள்ளை யடித்­ததை ஒப்­புக்­கொண்­ட­னர்.

இவர்கள் ஹரி­யானா மாநி­லத்­தைச் சேர்ந்த ராகுல், ரபீக், ஷாகித், ஷாஜித், இர்­சாத், காசிம்­கான் என்பது தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!