மதுரை: மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவருக்குத் தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொடுத்துள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் மனிதாபிமான செயல் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதனால், கடந்த 21 ஆண்டு களாக தான் எங்கு சென்றாலும் தனது மகனையும் இடுப்பில் சுமந்து சென்றுகொண்டிருந்த தாயின் பெரும் பாரம் கீேழ இறக்கிவைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆனையூரைச் சேர்ந்த காளிமுத்து - மாரீஸ்வரி தம்பதிக்கு 21 வயதில் பழனிகுமார் என்ற மகன் உள்ளார். இவர் பிறவிலேயே வாய் பேச முடியாத, நடக்கமுடியாத மாற்றுத் திறனாளி.
பெற்றோர் தங்களது சொற்ப சம்பளத்தில் மகனை வளர்ந்து வந்தனர்.
இந்நிலையில், மாரீஸ்வரி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட, காளி முத்துவும் போதைக்கு அடிமையானார். இதனால், மகனை யாரை நம்பியும் விட்டுச் செல்லாமல் எங்கு சென்றாலும் மகனையும் மாரீஸ்வரி தூக்கிச் செல்வார்.
தான் நோய்வாய்ப்பட்டுள்ளதால் மகனை தூக்கிச்செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுவதாகவும் இந்த சிரமத்தைப் போக்க இரு சக்கர வாகனம் வழங்கினால் தனக்கு பேருதவியாக இருக்கும் என்றும் ஆட்சியர் அன்பழகனிடம் மாரீஸ்வரி மனு அளித்தார்.
இதையறிந்த ஆட்சியர் தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனம் வாங்கி, அதில் காரில் உள்ளதுபோல் இடைவாருடன் இருக்கையை பிரத்தியேகமாக வடிவ மைத்து அந்த வாகனத்தை நேற்று ஆட்சியர் வழங்கினார்.
மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து மனு அளித்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளான தாய்க்கு உதவும் வகையில், 21 ஆண்டு சுமைக்கு ஓய்வளித்து உத விய ஆட்சியரை வலைத்தள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.