அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

2 mins read
a8faa49b-f894-41aa-ba6b-5554fb1d2bbf
கேட்ட தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று விஜயகாந்த் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

சென்னை: அதி­முக கூட்­டணியிலி­ருந்து தேமு­திக வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.

அதி­மு­க­வு­ட­னான தொகுதிப் பங்­கீட்டுப் பேச்சுவார்த்­தை­யில் ஆரம்­பம் முதலே தேமு­திக அதி­ருப்­தி­யில் இருந்து வந்­தது.

அதி­முக முதன்­மு­த­லில் பாம­க­வு­டன் தொகுதிப் பங்­கீட்டுப் பேச்சு ­வார்த்தை நடத்தி அக்­கட்­சிக்கு 23 தொகு­தி­களை ஒதுக்­கி­யது.

இது தேமு­தி­க­வுக்கு எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யது.

அது­மட்­டு­மல்­லா­மல் பாம­க­வுக்கு பிற­கு­தான் தேமு­தி­க­வு­டன் தொகுதி பங்­கீடு பேச்­சு­வார்த்­தையை அதி­முக தொடங்­கி­யது.

ஆரம்­பத்­தில் 41 தொகு­தி­களை தேமு­திக கேட்­டது. ஆனால், அதி­முக தரப்­பில் 28 தொகு­தி­கள் தரு­வ­தாக கூறப்­பட்­டது. 2ஆம் கட்ட பேச்­சு­வார்த்­தைக்கு அதி­முக அழைத்­த­போது தேமு­திக செல்­ல­வில்லை.

அத­னால் அதி­முக 28 தொகு­தி­கள் என்­பதை வெகு­வாக குறைத்­தது. இந்த நேரத்­தில் தேமு­திக 25 தொகு­தி­கள் கேட்­டது. ஆனால், அதி­முக தேமு­தி­கவை அதிர்ச்­சி­ய­டைய செய்­யும் வகை­யில், 15 தொகு­தி­கள் மட்­டுமே தர முடி­யும் என்று தடா­ல­டி­யாக கூறி­யது.

இத­னால், சற்று யோசித்த தேமு­திக, பாம­க­வுக்கு வழங்­கி­ய­து­போல 23 தொகு­தி­க­ளை­யா­வது தாருங்­கள் என்று அதி­மு­க­வி­டம் கேட்­டது.

ஆனால், அதிமு.க தரப்­பிலோ 13 தொகு­தி­களும் ஒரு மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் பத­வி­யும் தரு­வ­தாகச் சொல்­லப்­பட்­டது.

இந்த நிலை­யில், அதி­முக கூட்­ட­ணி­யில் தொட­ர­லாமா? அல்­லது தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்­க­லாமா? என்­பது குறித்து நேற்று மாவட்ட செய­லா­ளர்­க­ளு­டன் தேமு­திக தலைமை அவ­சர ஆலோ­சனை நடத்­தி­யது.

இந்த நிலை­யில் அதி­முக கூட்­ட­ணி­யில் இருந்து தேமு­திக வில­கு ­வ­தாக தேமு­திக பொதுச்­செ­ய­லா­ளர் விஜ­ய­காந்த் நேற்று அறி­வித்­துள்­ளார்.

இது குறித்து தேமு­திக பொதுச்­செ­ய­லா­ளர் விஜ­ய­காந்த் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், மாவட்ட கழக செய­லா­ளர்­க­ளின் ஆலோ­சனைக் கூட்­டத்­தில் ஏற்­பட்ட ஒத்த கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில் இன்­றி­லி­ருந்து 09.03.2021 அதி­முக-பாஜக கூட்­ட­ணி­யில் இருந்து தேமு­திக வில­கு­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே ஆலோ­ச­னைக் கூட்­டத்­தி­ற்குப் பிறகு பேசிய தேமு­திக துணைச் செய­லா­ளர் எல்.கே.சுதீஷ், தேமு­திக தொண்­டர்­கள் அனை­வ­ருக்­கும் இன்­று­தான் தீபா­வளி. வரும் சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லில் அதி­முக கூட்­டணி அனைத்து தொகு­தி­க­ளி­லும் வைப்புத் தொகையை இழந்து தோல்­வியை தழு­வும்," என்­றார்.

2011 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 இடங் களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தகுதிக்கு உயர்ந்து 7.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் 3வது அணியான மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று படுதோல் வியைத்தழுவியது. ஓர் இடத்தில்கூட தேமுதிக வெற்றி பெறவில்லை.