சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "கொரோனா முதல் தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்காமல் முயற்சி செய்து நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கை களை நாம் அனைவரும் மேற்கொள்வோம்," என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க. ஸ்டாலின்
1 mins read
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மு.க. ஸ்டாலின். படம்: தமிழக ஊடகம் -

