'மக்களின் மனம் நிறைவுபெறும் வகையில் தேர்தல் அறிக்கை'

'மக்களின் மனம் நிறைவுபெறும் வகையில் தேர்தல் அறிக்கை'

2 mins read

சென்னை: மக்­க­ளின் மனம் நிறைவு பெறும் வகை­யில் அதி­முக தேர்­தல் அறிக்கை இருக்­கும் என்று தமி­ழக முதல்­வ­ரும் அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான எடப்­பாடி பழனி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

அதி­முக முதற்­கட்ட வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்ட நிலை­யில் அடுத்­த­கட்ட வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யீடு மற்­றும் தேர்­தல் அறிக்கை தயா­ரிப்பு தொடர்­பான பணி­கள் குறித்து அதி­முக தொடர் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

அந்த வகை­யில் நேற்று முன்­தி­னம் மாலை 5 மணிக்கு அதி­முக 2ஆம் கட்ட வேட்­பா­ளர் பட்­டி­யல் மற்­றும் தேர்­தல் அறிக்கை தயா­ரிப்பு தொடர்­பான பணி­கள் குறித்த ஆலோ­சனை கூட்­டம் நடந்­தது.

இதில் முதல்­வர் எடப்­பாடி பழனி­ சாமி, ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் துணை முதல்­வ­ரு­மான ஓ. பன்­னீர்­செல்­வம் ஆகி­யோர் தலைமை வகித்­த­னர். துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் கே.பி.முனு­சாமி, ஆர்.வைத்­தி­லிங்­கம் உள்­ளிட்ட ஆட்­சி­மன்றக் குழு நிர்­வா­கி­கள் பங்­கேற்­ற­னர்.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் ேபசிய எடப்­பாடி பழ­னி­சாமி, மக்­க­ளின் மனம் நிறைவு பெறும் வகை­யில் தேர்­தல் அறிக்கை இருக்­கும் என்­றார்.

"அதி­முக தேர்­தல் அறிக்கை விரை­வில் வெளி­யி­டப்­படும். அதில் பல்­வேறு திட்­டங்­கள் மக்­க­ளின் மனம் நிறை­வு­பெ­றும் விதத்­தில் அறி­விப்­பு­கள் இடம்­பெ­றும். அதில் மக­ளிர் நல­னுக்­காக குடும்­பத்­துக்கு ஆண்­டுக்கு 6 சமை­யல் கியாஸ் சிலிண்­டர் விலை­யில்­லா­மல் வழங்­கப்­படும்.

"சமூ­கத்­தில் பொரு­ளா­தார சம­நி­லையை ஏற்­ப­டுத்­தும் வித­மாக குடும்­பத்­துக்கு மாதந்­தோ­றும் ரூ.1,500 குடும்பத் தலை­வி­யி­டம் வழங்­கப்­படும்.

"மேலும் பல அறி­விப்­பு­கள் விரை­வில் அதிமுக தேர்­தல் அறிக்­கை­யில் இடம்­பெ­றும்," என்­று அவர் தெரி­வித்­தார்.

"அதி­முக கூட்­டணி மக்­க­ளி­டம் மிகப்­பெ­ரிய செல்­வாக்கை பெற்­றுள்­ளது. கடந்த 4½ ஆண்டுகால­மாக நிறைய திட்­டங்­களை நிறை­வேற்றி இருக்­கி­றோம்.

"2011ஆம் ஆண்­டில் ஜெய­ல­லிதா முதல்­வ­ராக பொறுப்­பேற்­ற­தில் இருந்து இன்று வரை அதி­முக அரசு நிறைய திட்­டங்­களை நிறை­வேற்றி நாட்டு மக்­கள் மன­தில் இடம்­பி­டித்­துள்­ளது. மக்­கள் செல்­வாக்கு இருந்த கார­ணத்­தால்­தான் இடைத்­தேர்­தல்­களில் நாங்­கள் வெற்­றி­பெற்­றோம்.

"மக்­கள் மீண்­டும் அதி­முக அர­சு­தான் ஆட்­சிக்கு வர­வேண்­டும் என்று எண்­ணு­கி­றார்­கள். அதை இடைத்­தேர்­தல்­கள் மூலமே மக்­கள் எங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தி­விட்­டார்­கள்," என்று முதல்வர் பழனி சாமி கூறினார்.