பாஜகவில் இணைந்துள்ள அடுத்த புதுமுகம் 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன்

தமிழக பாஜகவில் ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள நிலையில், இப்போது புதிதாக ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுனும் அப்பட்டியலில் இணைந்துள்ளார்.

ஏற்கெனவே ராதாரவி, கங்கை அமரன், கௌதமி, குஷ்பு, ஆர்கே சுரேஷ், நமீதா, கஸ்தூரி ராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மத்திய உள்துறை இணை அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷண் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோரை திடீரென்று நடிகர் அர்ஜுன் சந்தித்துப் பேசினார்.

சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ள பாஜக, இம்முறை எப்படியும் இரட்டை இலக்கத்தில் வென்று விட நிர்ணயித்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் முதலில் திரை நட்சத்திரங்களை தன்பக்கம் இழுத்து மக்களிடம் வாக்குச் சேகரிப்பதை ஒரு யுக்தியாகக் கையாண்டு வருகிறது பாஜக. அதேபாணியை தமிழக பாஜகவும் கடைப்பிடிக்கிறது.

நடிகர் அர்ஜூன் பாஜக தலைவர்களை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்துப் பேசினார் என்று ஒருபுறம் கூறப்படுகிறது.

மறுபுறம், அர்ஜுன் பாஜக சார்பாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் கர்நாடகா மாநிலத்தில் அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!