சென்னையில் குஷ்பு; கமலை எதிர்த்து வானதி

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதுடெல்லியில் மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாள ருமான கிஷன்ரெட்டி, பாஜக தேசிய பொதுச்செயலர் அருண் சிங் ஆகியோர் முதல்கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும் அரவக்குறிச்சியில் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.
காரைக்குடியில் ஹெச் ராஜா, நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணன், மொடக்குறிச்சி யில் சிகே சரஸ்வதி, திருக்கோவி லூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கலிவரதன், திட்டக்குடியில் பெரியசாமி ஆகியோர் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லையில் நயினார் நாகேந்திரன், திருவண்ணாமலையில் தணிகைவேல், குளச்சலில் ரமேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
திருவையாறில் பூண்டி எஸ் வெங்கடேசன், துறைமுகம் தொகுதியில் வினோஜ் பி செல்வம், விருது நகருக்கு பாண்டுரங்கன், ராமநாத புரம் தொகுதிக்கு குப்புராமு ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நேற்று காலையில் பாஜகவில் இணைந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவ ணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு திமுகவைச் சேர்ந்த எழிலனை எதிர்த்து களம் காண்கிறார்.

திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க. செல்வம் நிச்சயம் சீட் கொடுக்கவேண்டும் என கறாராக பேசியதாகவும் கூறப் படுகிறது. திமுகவில் ஆயிரம் விளக்கு தொகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படலாம் என்ற நிலை இருந்ததால்தான் அவர் பாஜகவுக்குத் தாவியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பாஜகவில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
அதேபோல, அண்ணாமலை- திமுக இளங்கோவை எதிர்த்தும் வானதி சீனிவாசன் - காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாரை எதிர்த்தும் போட்டியிடுகின்றனர்.
கோவை தெற்குத் தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் களம் இறங்க இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!