ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவதற்கு தனக்கு அதிமுக வாய்ப்பு வழங்க வில்லை என்று எம்எல்ஏ தோப்பு கே வெங்கடாசலம் கண்ணீர் மல்க விம்மி அழுததால் அவரது ஆதரவாளர்களும் அழுதனர். "கறிவேப்பிலை போல் என்னைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விட்டார்கள். நான் கட்சி, இயக்கம், பொதுமக்கள், தொகுதி மக்கள், முதல்வர், துணை முதல்வர் என அனைவருக்கும் விசுவாசமாகத் தான் இருந்தேன். இன்னும் இருக்கிறேன். 'நான் என்ன தவறு செய்தேன், எனக்கு ஏன் தொகுதி வழங்கவில்லை' எனக் கேட்டபடியே கதறியழுதார். இதனால் தொண்டர் களும் அழுதனர். படம்: ஊடகம்
'நான் செய்த தவறுதான் என்ன?': விம்மி விம்மி அழுத எம்எல்ஏ
1 mins read
-

