கமல்ஹாசனின் கார் சன்னலைத் திறக்க முற்பட்ட ஆடவர் மருத்துவமனையில்

கமல்ஹாசனின் கார் சன்னலைத் திறக்க முற்பட்ட ஆடவர் மருத்துவமனையில்

1 mins read
d5fc0e65-296b-4632-9e18-e7cb530307a6
இந்தச் சம்பவத்தில் கமல்ஹாசனுக்கு காயமோ காருக்கு சேதமோ ஏற்படவில்லை என்று போலிசார் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம் -

தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காஞ்சிபுரத்தில் நேற்று (மார்ச் 14) தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பவிருந்தார்.

அப்போது கமல்ஹாசனின் கார் கூட்டத்தைவிட்டு வெளியேறியபோது அங்கிருந்த ஆடவர் ஒருவர் காரின் சன்னலைத் திறக்க முற்பட்டார்.

இதனைக் கண்ட கட்சித் தொண்டர்கள் அந்த ஆடவரைத் தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் கமல்ஹாசனுக்கு காயமோ காருக்கு சேதமோ ஏற்படவில்லை என்று போலிசார் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்