தேனி: தேனி அருகே தங்களது காதலுக்குப் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திரு மணமான பெண்ணும் கணவரும் ஒருவர் மாற்றி ஒருவர் 100 அடி ஆழ கிணற்றில் குதித்தனர்.
எனினும், அந்தக் கிணற்றில் 4 அடி மட்டுமே தண்ணீர் இருந்ததால், காயங்களுடன் உயிருக்குப் போராடிய இருவரையும் தீயணைப் புத் துறையினர் மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள தோட்டப்பகுதியில் வசித்து வரும் முத்துமாரி, 38, என்பவருக்கு மூன்று பிள்ளைகள். கணவர் இறந்த நிலையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். வீரபாண்டியில் உள்ள கல்லூரியில் படித்துவரும் மகன் துர்கேஸ்வரனும், 21, மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர்யா, 18, என்ற பெண்ணும் காதலித்து திடீரென திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தம்பதிகள் கிணற் றுக்குள் குதித்தனர்.