சென்னை: கமல் ஒரு நடிகர் என்பதால் அவரைப் பார்க்க மக்கள் கூடுவார்கள் என்றும் ஆனால், வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடு வதால் அது நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியுள்ளது.
இதே தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் பாஜக சார்பில் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனி வாசனும் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், கமலுக்கு எதிராக நடிகை கௌதமி உட்பட பல்வேறு சினிமா பிரபலங்களும் இத்தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
"சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணிபுரிவதற்கும் வித்தி யாசம் உள்ளதை கமல்ஹாசன் விரைவில் புரிந்துகொள்வார்," என்றும் அவர் கூறினார்.

