சென்னை: இலவசங்களைக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதைவிட அவர்களுக்கு வேலை கொடுத்து சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்யவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
"தமிழக அரசு ஏழு லட்சம் கோடி கடனில் உள்ளது. தற்போது இலவசத் திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வேலை. மக்கள் தன்னிறைவு பெற்று வாழவேண்டும் என்றால் அதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே முக்கிய பணியாக அமையும். அதை நிச்சயம் அமமுக தமிழக மக்களின் ஆதரவோடு வெற்றிபெற்று நிறைவேற்றும்," என்றார்.

