சென்னை: இன்னும் மூன்று வாரங்களில் நடக்கவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பலவும் தொகு திப் பங்கீட்டை இறுதி செய்து வேட் பாளர்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், தேமுதிக வெளி யிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் விருத்தாசலம் தொகுதியில் பிரேம லதா விஜயகாந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகியது.
பாமகவுக்கு இணையான தொகுதிகளையும் கௌரவத்தையும் தங்களுக்கு அதிமுக அளிக்க வில்லை என்று அப்போது குற்றம் சாட்டிய தேமுதிக அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது.
இந்நிலையில், தேமுதிகவுக்கு மநீம அழைப்பு விடுக்க, கடைசியாக அமமுகவுடன் கைேகாத்துள்ளது. தேமுதிகவுக்கு அமமுக 60 இடங்களை ஒதுக்கியுள்ள நிலையில், இந்த 60 இடங்களுக்கும் உடனடி யாக வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது.
இதுவரை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் இல்லாத தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தனது கணவர் விஜயகாந்த் முதல்முறை யாக வெற்றி வாகை சூடிய விருத் தாச்சலம் தொகுதியில் போட்டி யிடுகிறார்.
ஆனால், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாததால் அக்கட்சியின் தொண் டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அேதபோல், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் போட்டி யிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களது பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
"விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லாத காரணத்தால் பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதோ, செய்தியாளர்களைச் சந்திப்பதோ இல்லை. அந்தப் பணிகளை பிரேமலதாதான் மேற்கொண்டு வருகிறார்.
"எனவே, அவரால் தேர்தலில் போட்டியிட்டு களப்பணியாற்ற முடியாது என்கிற காரணத்தால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை," என்று தேமுதிக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

