காங்கிரஸ்: உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரமளிக்க நடவடிக்கை

காங்கிரஸ்: உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரமளிக்க நடவடிக்கை

3 mins read

சென்னை: தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான காங்­கி­ரஸ் கட்சி தனது தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில் உள்ள 234 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளுக்­கான தேர்­தல் வரு­கிற 6ம் தேதி நடை­பெற உள்­ளது. தேர்­தலை சந்­திக்க அனைத்து அர­சி­யல் கட்­சி­களும் முழு­வீச்­சில் தயா­ராகி வரு­கின்­றன. தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க கூட்­ட­ணி­யில் 25 இடங்­களில் காங்­கி­ரஸ் கட்சி போட்­டி­யி­டு­கிறது. இதற்­கான முதல்­கட்ட வேட்­பா­ளர் பட்­டி­யல் 13 ஆம் தேதி இரவு வெளி­யா­னது.

இந்­நி­லை­யில் சட்­ட­மன்றத் தேர்­த­லுக்­கான காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கையை கே.எஸ்.அழ­கிரி வெளி­யிட்­டுள்­ளார்.

முக்­கிய அம்­சங்­கள்: * முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி கண்ட கன­வின்­படி, உள்­ளாட்­சி­க­ளுக்கு மீண்­டும் அதி­கா­ரம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

* புதிய வேலைவாய்ப்புத் திட்டம், * பன்னிரண்டாம் வகுப்பு படித்து சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்க்கு உணவு, உறைவிடம் வழங்கி 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொழில் துறை­யில் பின்­தங்­கிய மாவட்­டங்­களில் இருந்து தொழில் தொடங்க விரும்­பு­வோ­ருக்கு, நிலம், மின்­சா­ரம் போன்ற தொழில் ஆதா­ரத் தேவை­க­ளுக்கு விலை­யில் சலு­கை­யும் கட்­ட­ணத்­தில் மானி­ய­மும் வழங்­கப்­படும்.

* புதி­தாக தொழில் முத­லீடு செய்­ய முனை­வோ­ருக்கு குறைந்­தது 5 ஆண்­டு­க­ளுக்கு வரி விலக்கு.

* பண­ம­திப்­பி­ழப்பு, குள­று­ப­டி­யான ஜிஎஸ்டி மற்­றும் கொரோனா தாக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனை­வோர், வங்­கி­களில் பெற்ற கட­னுக்­காக 50 விழுக்­காட்டை தமி­ழக அரசு மானி­ய­மாக வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். * தமி­ழ­கத்­தில் மிகச் சிறப்­பாக செயல்­பட்டு வந்த தமி­ழக சட்­ட­மன்ற மேல­வையை நியா­ய­மற்ற கார­ணங்­க­ளைக் கூறி, கடந்த காலத்­தில் கலைக்­கப்­பட்­டது. ஜன­நா­ய­கத்­தில் சட்­டப்­பே­ர­வை­யும், மேல­வை­யும் இரு கண்­க­ளாக செயல்­பட்டு வந்­தன. இந்­நி­லை­யில், விவா­தங்­கள் செழுமை பெற மீண்­டும் சட்­ட­மன்ற மேல­வையை கொண்டு வர வேண்­டு­மென்று காங்­கி­ரஸ் கட்சி விரும்­பு­கிறது.

* தமி­ழ­கத்­தில் புதிய அரசு அமைந்­த­தும் முழு மது­வி­லக்கை அமல்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். * தமி­ழ­கத்­தில் விவ­சா­யி­க­ளைப் பாது­காக்­கும் புதிய சட்­டங்­கள். * காவிரி நீர் மேலாண்மை வாரி­யத்­தை­யும், ஒழுங்­காற்­றுக் குழு­வை­யும் தன்­னாட்சி அமைப்­பா­கச் செயல்­பட வேண்­டும் என்ற உச்ச நீதி­மன்ற உத்­த­ர­வைச் செயல்­ப­டுத்­தக் காங்­கி­ரஸ் கட்சி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும்.

* நீட் தேர்வை ரத்து செய்ய நட­வ­டிக்­கை­மேற்­கொள்­ளப்­படும். மருத்­து­வம் உள்­ளிட்ட அனைத்துத் தொழில் கல்­லூ­ரி­க­ளி­லும் அர­சுப் பள்ளி மாண­வர்­கள் சேரு­வ­தற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள 7.5% ஒதுக்­கீட்டை 10 விழுக்­கா­டாக உயர்த்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

* இந்து அற­நி­லை­யத்­து­றைக்­குட்­பட்ட திருக்­கோ­யில்­களில், இந்து மதத்­தைச் சேர்ந்த அனைத்­துச் சாதி­யி­ன­ரை­யும் அர்ச்­ச­க­ராக நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். * முதி­யோர் உத­வித் தொகை பெறு­வோர் குடும்­பத் தலை­வ­ராக இருந்­தால், அவர்­க­ளது வீடு­க­ளுக்கே சென்று ரேசன் பொருட்­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். * சாதி மறுப்பு திரு­ம­ணம் செய்து கொண்­ட­வர்­கள் ஆண­வப் படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தைத் தடுக்க தனிச் சிறப்­புச் சட்­டங்­கள் கொண்டு வரப்­படும். * மாதம் ஒரு­முறை விசைத் தறி­யா­ளர்­க­ளுக்கு மின் கணக்­கீடு செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இவற்றை காங்­கி­ரஸ் தனது தேர்­தல் அறிக்­கை­யாக வெளி­யிட்­டுள்­ளது.