திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின்

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின்

1 mins read
c913a21a-2dd4-48aa-bf14-0214392fe7bb
-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சேலம் சென்றார். அங்கு மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஏற்காடு தொகுதி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் பரப்புரையில் ஈடுபட்டார். இதற்காக திருச்சியில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், செவ்வாய்பேட்டை சந்தையில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவு திரட்டினார். படம்: ஏஎஃப்பி