'தொல்லியல் துறை மூலம் பாஜக அரசு கையகப்படுத்திய திருவண்ணாமலை கோயிலை மீட்டுத் தந்தவர் கருணாநிதி'

'தொல்லியல் துறை மூலம் பாஜக அரசு கையகப்படுத்திய திருவண்ணாமலை கோயிலை மீட்டுத் தந்தவர் கருணாநிதி'

2 mins read

திரு­வண்­ணா­மலை: திரு­வண்­ணா­மலை அண்­ணா­ம­லை­யார் கோயி­லுக்கு பார­திய ஜனதா கட்­சி­யால் ஆபத்து நேர்ந்­த­போது, அதனை தடுத்து நிறுத்தி கோயிலை தமி­ழர்­க­ளி­டம் மீட்­டுத் தந்­த­வர் முன்­னாள் திமுக தலை­வர் கரு­ணா­நிதி என தேர்­தல் பரப்­பு­ரை­யைத் தொடங்­கிய திமு­க­வின் முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு தெரி­வித்­தார்.

திரு­வண்­ணா­மலை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் திமுக சார்­பில் மூன்­றா­வது முறை­யாக போட்­டி­யிட முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு நேற்று பிற்­ப­கல் வேட்பு மனு தாக்­கல் செய்­தார். பின்­னர் அவர், அண்­ணா­மலை­யார் கோயில் ராஜ­கோ­பு­ரம் முன்பு தனது தேர்­தல் பரப்­பு­ரை­யைத் தொடங்­கி­னார். அப்­போது அவர் பேசும்­போது, "அண்­ணா­ம­லை­யார் கோயில் முன்­பாக வாக்கு சேக­ரிப்­புப் பணி­யைத் தொடங்கி உள்­ளேன்.

"அண்­ணா­ம­லை­யார் கோயி­லுக்­கும் திமு­க­வுக்­கும் நெருங்­கிய உறவு உள்­ளது. ஆன்­மி­கம் நிறைந்த கோயி­லுக்கு பாஜக ஆட்­சி­யில் ஆபத்து வந்­தது.

"இந்த கோயிலை மத்­திய தொல்­லி­யி­யல் துறை கைய­கப்­ப­டுத்­தி­யது. இதை எதிர்த்து பல கட்ட போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன.

அப்­போது 2004ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைக்கு வந்­தி­ருந்த மறைந்த திமுக தலை­வர் கரு­ணா­நிதி, மக்­கள் தீர்ப்பே மகே­சன் தீர்ப்பு.

"நாம் நினைக்­கும் ஆட்சி புது­டெல்­லி­யில் அமைந்­து­விட்­டால், அண்­ணா­ம­லை­யார் கோயில் மீட்­டெ­டுக்­கப்­படும் என உறுதி அளித்­தார். அதன்­படி, புது­டெல்­லி­யில் மன்­மோ­கன் சிங் தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் ஆட்சி அமைந்­தது.

"கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றும்­வ­கை­யில், அண்­ணா­ம­லை­யார் கோயிலை மீட்டு, தமி­ழ­ர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தார் கரு­ணா­நிதி.

"அண்­ணா­ம­லை­யார் கோயில் வேண்­டாம் என தெரி­வித்த பாஜக, திரு­வண்­ணா­ம­லை­யில் தற்­போது போட்­டி­யி­டு­கிறது.

"நம் மண்­ணுக்­கும் பாஜ­க­வுக்­கும் ஒரு­போ­தும் ஒத்­து­வ­ராது. எந்­தக் காலத்­தி­லும் மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கட்சி பாஜக," என்­றார்.

7 பேர் வேட்­பு­மனு தாக்­கல்

திரு­வண்­ணா­மலை மாவட்­டத் தில் உள்ள எட்டு தொகு­தி­க­ளி­லும் திமுக போட்­டி­யி­டு­கிறது. முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு உள்­ளிட்ட ஏழு திமு­க­வி­னர் நேற்று முன்­தி­னம் வேட்­பு­மனு தாக்­கல் செய்­த­னர்.