எம்ஜிஆர் பேரன்: அதிமுகதான் என் உயிர்

எம்ஜிஆர் பேரன்: அதிமுகதான் என் உயிர்

1 mins read
c8b08fd1-ab6d-41dc-8f51-044186d16861
-

சென்னை: எனது தாத்தா உருவாக்கிய கட்சியைத் தவிர வேறு எந்த கட்சிக்காகவும் உழைக்கமாட்டேன், அதுதான் என் உயிர் என்று எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் ரவி (படம்) கூறியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரின் மகன் ராமச்சந்திரன் ரவி தேனியில் செய்தியாளர்களி டத்தில் கூறியபோது, "சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தேன். ஆனால், எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், எனக்கும் என் அபிமானிகளுக்கும் வருத்தம்தான். நடிகர் கமல் உட்பட பல்வேறு கட்சியினர் தங்களது கட்சியில் சேருமாறு என்னை அழைத்தனர். முதல்வர் கட்சியில் பதவி தருவதாக வாக்குறுதி அளித் துள்ளார். வரும் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளி லும் வெற்றிபெறும்," என்றார்.