'அதிமுக, திமுகவை வீழ்த்தவே தேமுதிகவுடன் கைகோப்பு'

'அதிமுக, திமுகவை வீழ்த்தவே தேமுதிகவுடன் கைகோப்பு'

2 mins read

சென்னை: தீமை­யை­யும் துரோ­கத்­தை­யும் வென்று, மாநில மக்­க­ளைக் காக்­கவே சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தேமு­தி­க­வு­டன் கைகோத்து போட்­டி­யி­டு­வ­தாக அம்மா மக்­கள் முன்­னேற்­றக் கழ­கப் பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன் கூறி­யுள்­ளார்.

சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு இன்­னும் 20 நாள்­களே உள்ள நிலை­யில், கோயம்­பேட்­டி­லுள்ள தேமு­திக அலு­வ­ல­கத்­தில் அக்­கட்­சித் தலை­வர் விஜ­ய­காந்தை டிடிவி தின­க­ரன் நேரில் சந்­தித்து ஆேலாசித்­தார்.

இதைத்­தொ­டர்ந்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­வர், "தீய சக்­தி­யான திமு­க­வை­யும் துரோ­கக் கட்­சி­யான அதி­மு­க­வை­யும் வீழ்த்­து­வ­து­தான் எங்­கள் கூட்­ட­ணி­யின் முக்­கிய இலக்கு," என்­றார்.

"எங்­க­ளது கூட்­டணி கட்­சித் தலை­மை­யால் அமைக்­கப்­பட்­டது என்­ப­தை­வி­ட­வும் தொண்­டர்­க­ளால் உரு­வா­னது என்றே சொல்­ல­லாம்.

"இல­வ­சங்­களை வழங்கி மக்­களை ஏமாற்றி மோசம் செய்து வரும் கட்­சி­க­ளைத் தொடர்ந்து ஆட்­சி­யில் அம­ர­வி­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே கூட்­டணி சேர்ந்­துள்­ளோம்," என்­றார் தின­க­ரன்.

தொடர்ந்து பேசி­ய­வர், "ஒவ்­வொரு கட்­சிக்­கும் ஒவ்­வொரு வித­மான கொள்­கை­கள் இருக்­கும்.

"கூட்­ட­ணிக் கட்­சி­கள் அனைத்­தும் ஒரே கொள்­கை­யு­டன் இருக்­க­மு­டி­யாது. ஆனால், திமுக, அதி­மு­கவை வீழ்த்­த­வேண்­டும் என்­பது­தான் எங்­களது குறிக்­கோள்.

"நல்­ல­தொரு ஆட்­சியை ஊழ­லற்ற, வெளிப்­ப­டை­யான, மக்­க­ளுக்கு நன்மை பயக்­கும் ஆட்­சி­யைத் தருவதுதான் எங்­கள் கூட்­டணி," என்­றார்.

சசி­க­லா­வின் ஆத­ரவு உங்­க­ளது கூட்­ட­ணிக்கு இருக்­குமா என்ற செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­விக்கு பதி­ல­ளித்த டிடிவி தின­க­ரன், சசி­கலா­வின் மான­சீக ஆத­ரவு எங்­கள் கூட்­ட­ணிக்­குத்­தான் உண்டு என்­றும் கூறி­னார்.

இத்தேர்தலில் மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே மூன்றாவது அணியில் முந்தப் போவது யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.