சென்னை: தமிழகத்தில் இன்னும் 20 நாள்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து அரசியல் கட்சியினரும் ஒவ்ெவாரு நிமிடத்தையும் பொன்னாக மதித்து வாக்கு சேகரிப்பு, பிரசாரப் பணி களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளன.
இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், பாஜக, மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.
இடையிடையே, தங்களுக்குப் பிடிக்காத கட்சிகளை ஊழல், நேர் மையற்ற கட்சிகள் என்றும் கடு மையாகச் சாடி வருகின்றனர்.
இந்நிலையில், திருவையாறில் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்க டேசனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது பேசியவர், "ரூ. 80,000 கோடி மதிப்பிலான கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
"மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் அந்தத் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். தண்ணீருக்கு கர்நாடகத்தை நம்பி இருக்கும் நிலைமை இனி வராது," என்றவர், "வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு சாவு மணி அடிப் ேபாம்," என்றும் விமர்சித்தார்.
இதற்கிடையே, மதுரையில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்த திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், "நான்கூட 200 தொகுதிகளில்தான் திமுக கூட்டணி வெற்றிபெறும் என நினைத்தேன். ஆனால், 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத நிலைமை உருவாகப் போகிறது.
"திமுகவில் 16 வயதில் இளைஞா் அணி உறுப்பினராகி அதன்பின் எம்எல்ஏ, மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என தொடர்ந்து பல பதவிகளையும் வகித்துள்ளேன்.
"இந்தத் தோ்தலில் தமிழகத்தை ஆள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங் கள்," என்றும் ஸ்டாலின் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கோவையில் பேசியபோது, "ஆளும் கட்சி விஷப்பாம்பு போன்றது. தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் வால் மட்டும் ஆடிக் கொண்டுள்ளது.
"மற்றொரு கட்சியில் தலையுள்ளது. ஆனால், அதுவும் மிகவும் ஆபத்தானது. எனவே, இருவரில் ஒருவருக்கு வாக்கு என்பதை கைவிட்டு மூன்றாவது அணிக்கு வாய்ப்புத் தாருங்கள். எம்ஜிஆா் தொடங்கியதே மூன்றாவது அணிதான். அதுதான் வெற்றிபெற்று மற்ற கட்சிகளை வனவாசம் போகச் செய்தது," என்றார்.

