புற்றுநோயாளிகள் நம்பிக்கை பெற 78 கிலோ கூந்தலைத் தானம் செய்த 1,000 பெண்கள்

புற்றுநோயாளிகள் நம்பிக்கை பெற 78 கிலோ கூந்தலைத் தானம் செய்த 1,000 பெண்கள்

1 mins read
d3e69c2f-ef39-42b2-ad68-bdd48b0f176d
திருப்பூரில் புற்­று­நோய்க்கு சிகிச்சை பெறும்­ நோயா­ளி­களுக்கு உதவும் வகையில் தனது கூந்தலில் சிறிதளவை தானம் செய்யும் பெண். படம்: ஊடகம் -

திருப்­பூர்: புற்­று­நோ­யால் பாதிக்­கப் பட்­டுள்ள நோயா­ளி­க­ளுக்கு உத­வும் வகை­யில், ஆயி­ரக்­க­ணக்­கான பெண்­கள் ஒன்று சேர்ந்து 78 கிலோ முடி­யைத் தானம் செய்துள்­ள­னர்.

திருப்­பூ­ரில் ஒரு விழாவாக இந்த நிகழ்வை நடத்தி உள்ளனர்.

புற்­று­நோய்க்கு சிகிச்சை பெறும்­போது நோயா­ளி­க­ளுக்கு முடி உதிர்­வது வழக்­கம்.

'கீமோ­தெ­ரபி' எனப்­படும் கதிர் வீச்சு சிகிச்சை அளிக்­கும்­போது முடி அதி­க­ள­வில் கொட்டிவிடும்.

இத­னால், புற்­று­நோ­யா­ளி­களில் பலர் தங்­கள் தன்­னம்பிக்­கையை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

இந்நிலையில், இந்த பாதிப்புக்கு ஆளாவோருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ­பெண்­கள் தங்­கள் முடியைத் தானம் செய்து வருவது அதி­க­ரித்து வரு­கிறது.

அப்­படி, தான­மா­கப் பெறப்­படும் தலை­முடி பெண்கள் சிகை­ய­லங்­கா­ரத்திற்குப் பயன்படும் 'டோப்­பா'­வாக தயாரிக்கப்­ப­டு­கிறது. அத­னைப் பயன்­ப­டுத்­தும் நோயா­ளி­கள் அழ­கிய கேசத்­து­டன் தங்­க­ளின் பழைய தோற்றத்தைப் பெறமுடிகிறது.

இந்த தன்­னம்­பிக்­கை­யால் புற்று­நோயை வென்­ற­வர்­களும் அதி­க­முள்ளனர். அவ்­வ­கை­யில் திருப்­பூரில் 1,000 பெண்­கள் சேர்ந்து 78 கிலோ முடி தானம் செய்து சாதனை படைத்து உள்­ள­னர்.

கணி­யாம்­பூண்­டி­யில் உள்ள இந்­திய மருத்­து­வர் சங்­கத்­தில் மக­ளிர் தின விழா கொண்­டா­டப்பட்­டது.

அந்த விழா­வில் "திருப்­பூர் செலிப்­ரே­சன் ரோட்­டரி கிளப்" சங்கம் மூல­மாக 78 கிலோ முடி புற்றுநோயா­ளி­க­ளுக்­கா­கத் தான­மா­கப் பெறப்­பட்­டது. இவ்விழா சாதனை நிகழ்ச்சியாகவும் பதி­யப்­பட்­டு சான்­றி­தழ்­கள், பதக்­கங்­களும் சங்கத்தின­ரி­டம் வழங்­கப்­பட்­டது.