புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நாராயணசாமியின் பெயர் இடம்பெறவில்லை.
தமிழகத்துடன் சேர்த்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் ஏனம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2016 தேர்தலில் போட்டி யிடாத நாராயணசாமியை புதுச்சேரி முதல்வராக அறிவித்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. தொடர்ந்து அதன் பின்னர், நடைபெற்ற இடைத் தேர்தலில் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
புதுவையில் இரு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி முடிவு செய்துள்ளாா். அதன்படி, தட்டாஞ்சாவடி தொகுதி யில் அவா் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஏனம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

