சென்னை: வருமானவரித் துறையினர் சென்னையில் உள்ள மூன்று கடைகளில் நடத்திய சோதனையின்போது ஐந்து கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது 'ஹவாலா' பணப்பறிமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட தொகை என்பது தெரிய வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய இந்தச் சோதனை விடிய விடிய நடைபெற்றது. முதல் கடையில் சோதனையிட்டபோது ரொக்கப்பணம் ஏதும் கிடைக்கவில்லை.
எனினும் முறைகேடான வகையில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றம் குறித்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் கடையின் உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையின்போது அருகில் உள்ள கடைகளில் 'ஹவாலா' பணம் இருப்பது தெரிய வந்தது.