ஸ்டாலினுக்கு உள்ள தகுதி: கமல் விமர்சனம்

ஸ்டாலினுக்கு உள்ள தகுதி: கமல் விமர்சனம்

1 mins read

சென்னை: கருத்துக்கணிப்பு களை நம்ப இயலாது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைத்தால் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாதி மூடப்படும் என்றார்.

"கருத்துக் கணிப்புகள் சாதகமாக இருக்கும்போது அது ஊக்கமாக இருக்கும். சாதகமாக இல்லாதபோது அதைக் களைந்துவிட்டு நாம் புதிய கணக்கை உருவாக்க வேண்டும்," என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமக்கு தனிப்பட்ட வகையில் கோபம் ஏதுமில்லை என்றும் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் மாறுபட்டு இருப்பதால் அவரை விமர்சிக்க வேண்டியுள்ளது என்றும் கமல் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "அப்படி நினைப்பது நான் மட்டுமல்ல... நான் தனி மரம் அல்ல," என்று பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.