இரண்டாயிரம் வேட்பு மனுக்கள் குவிந்தன

இரண்டாயிரம் வேட்பு மனுக்கள் குவிந்தன

1 mins read
02d66249-1d7c-4269-b271-3bd8842fdd27
பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார். 'நடமாடும் நகைக்கடை' என்று வர்ணிக்கப்படும் இவர் ஏராளமான தங்க நகைகளை அணி வது வழக்கம். 11,200 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அணிந்த படி அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்பு மனுக்­களை தாக்­கல் செய்ய இன்று கடைசி நாளா­கும்.

மொத்­த­முள்ள 234 தொகு­தி­களுக்கு இது­வரை 2 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் மனுத்­தாக்­கல் செய்­துள்­ள­னர்.

வரும் ஏப்­ரல் 6ஆம் தேதி தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், மார்ச் 12ஆம் தேதி வேட்பு மனுத்­தாக்­கல் தொடங்­கி­யது. முதல்­ நா­ளன்று 59 வேட்­பு­ம­னுக்­கள் மட்­டுமே தாக்­கல் செய்­யப்­பட்­டன.

அதன் பின்­னர் வளர்­பிறை முகூர்த்த நாள் என்­ப­தால் முதல்வர் பழ­னி­சாமி, திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் உட்­பட பல முக்­கிய தலை­வர்­களும் வேட்­பா­ளர்­களும் மனுத்­தாக்­கல் செய்­த­னர்.

நேற்று முன்­தி­னம் மட்­டும் 964 பேர் வேட்­பு­ம­னுக்­களை தாக்­கல் செய்­துள்ள நிலை­யில், இன்று மாலை 3 மணி­யு­டன் அதற்­கான கால அவ­கா­சம் முடி­வுக்கு வருகிறது. இது­வரை தாக்­க­லான மனுக்­க­ளின் எண்­ணிக்கை அடிப்ப­டை­யில், அதி­க­பட்­ச­மாக கரூர் பேர­வைத் தொகு­தி­யில் 43 வேட்­பு­ம­னுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

சென்னை ஆர்.கே.நக­ரில் 24 மனுக்­களும் காங்­கே­யம் தொகு­தி­யில் 22 மனுக்­களும் தாக்­க­லாகி உள்­ளன.

மனுக்­களைத் திரும்­பப் பெற மார்ச் 22 கடைசி நாள். அன்று மாலை ஐந்து மணிக்கு இறுதி வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யி­டப்­படும்.