செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

தேர்தல் விதிமுறை மீறல்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர்: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் மீது வழக்குப் பதி வாகி உள்ளது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டி யிடும் அவர் நேற்று முன்தினம் பொம்மையாபுரம் என்ற கிராமத்தில் இரவு பத்து மணிக்கு மேல் பொது மக்களிடம் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக் கப்பட்ட புகாரின் பேரில் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வாய்ப்பு மறுப்பு: சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் அமைச்சர்

ஈரோடு: பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலத்துக்கு அதிமுக தலைமை இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து அவர் அதே தொகுதியில் சுயேச்சையாக களம் காண்கிறார். கடந்த 2011 முதல் தொடர்ந்து பத்தாண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கும் வெங்கடாச்சலம், மூன்றாவது முறையாக களம்காண விருப்ப மனு அளித்திருந்தார். எனினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சுயேச்சையாக போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தியதை அவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

தபால் மூலம் வாக்களிப்பதை எதிர்த்த திமுக மனு தள்ளுபடி

சென்னை: மாற்றுத்திறனாளிகளும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் திமுகவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கமல் கட்சிப் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகரனின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது எட்டு கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதற்குரிய கணக்குகள் காண்பிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. சந்திரசேகரனும் கமல்ஹாசனும் ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.

குடிசை வீட்டில் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்

திருவாரூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ள நிலையில் திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து குடிசை வீட்டில் (படம்) வசித்து வருகிறார். சமூக ஆர்வலரான 49 வயதான மாரிமுத்துவின் மொத்த சொத்து மதிப்பு 1.75 லட்சம் ரூபாய் மட்டுமே என அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது மனைவி விவசாயக் கூலியாக உள்ளார். குத்தகைக்கு எடுத்துள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறது மாரி முத்துவின் குடும்பம். இம்முறை மாரிமுத்துவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ் குமாரின் சொத்து மதிப்பு, ஆவணங்களின்படி ரூ.20 கோடி ஆகும்.

கீழடியில் மேலும் சில தாழி, மண் தட்டுகள் கண்டெடுக்கப்பட்டன

சிவகங்கை: கீழடியில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் பயன்படுத்திய தாழி, மண் தட்டுகள் கண்டெ டுக்கப்பட்டன. கொந்தகை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இவற்றுடன் சிவப்பு, கறுப்பு வண்ணத்திலான தட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதையடுத்து அகழாய்வுப் பணிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.