தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், அரசியலில் தாம் படிப்படி யாக உயர்ந்ததாகக் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளது என முதல்வரால் பட்டியலிட்டு கூறமுடியுமா? என கேட்டுள்ள மு.க.ஸ்டாலின், "15 வயது முதல் திமுகவிற்காக உழைத்து எம்எல்ஏ, மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல அனுபவங்களைப் பெற்று தற்போது முதல்வர் வேட்பாள ராக தமிழக மக்களைச் சந் தித்து வருகிறேன்," என்றார்.

