தேர்தல் நாள் நெருங்குகிறது; அனைத்துக் கட்சியினரும் பிரசாரம் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் மும்முரம்

தேர்தல் நாள் நெருங்குகிறது; அனைத்துக் கட்சியினரும் பிரசாரம் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் மும்முரம்

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற இன்­னும் இரண்டு வாரங்­களே உள்­ள­தால், அனைத்து அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் தேர்­தல் பிர­சா­ரத்­தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

மாநி­லத்­தில் உள்ள 234 தொகுதி களி­லும் அதி­ரடி பிர­சா­ரத்­தை­யும் வித்­தி­யா­ச­மான வாக்கு சேக­ரிப்பு யுக்­தி­க­ளை­யும் வேட்­பா­ளர்­களும் அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் தீவி­ரப் படுத்தி உள்­ள­னர்.

ஆங்­காங்கே இந்த வேட்­பா­ளர் களின் வெற்­றிக்கு அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­களும் தொண்­டர்­களும் பிர­ப­லங்­களும் கலை­ஞர்­களும் கைகொ­டுத்து வரு­கின்­ற­னர்.

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லும் கன்­னி­யா­கு­மரி மக்­க­ளவை இடைத்­தேர்­த­லும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடை­பெற உள்­ளன.

இதை­ய­டுத்து, தீவிர பிர­சா­ரத்­தில் குதித்­துள்ள ஆளும் அதி­முக, எதிர்க்­கட்­சி­யான திமுக, காங்­கி­ரஸ், பாஜக, மநீம, அம­முக, நாம் தமி­ழர் கட்சி உள்­ளிட்ட அனைத்­துக் கட்சி வேட்­பா­ளர்­களும் வாக்கு சேக­ரிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

காய்­க­றிச் சந்­தைக்கு வந்த மக்­க­ளி­டம் காய்­கறி வியா­பா­ரம் செய்­தும் தனக்குத் துணையாக வந்­த­வர்­க­ளுக்கு தேநீர் போட்­டுக் கொடுத்­தும் திரு­வண்ணாமலை மாவட்­டம், கல­சப்­பாக்­கம் தொகுதி அதி­முக வேட்­பா­ளர் வி. பன்­னீர்­செல்­வம் வாக்குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­டார்.

விரு­து­ந­கர் மாவட்­டம், அருப்­புக் கோட்டை தொகு­தி­யில் போட்­டி­யி­டும் தேமு­திக வேட்­பா­ளர் ரமேஷ், கூட்­டணிக் கட்­சி­யான அம­முக உறுப்பினர்­க­ளு­டன் இணைந்து புளி­யம்பட்டி ஆயி­ரங்­கண் மாரி­யம்­மன் கோவி­லுக்கு வழி­பட வந்­த­வர்­க­ளி­டம் வாக்கு சேக­ரித்­தார்.

குடி­நீர் உள்­பட மக்­க­ளின் அடிப்­படை தேவை­க­ளுக்­காக கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக உழைத்து உள்­ள­தால் எவ்­வித கூச்­ச­மும் இன்றி நான் வாக்கு சேக­ரிப்­பேன் என்று சென்னை திரு­விக நகர் தொகு­தி­யில் திமுக வேட்­பா­ளர் தாய­கம் கவி வாக்கு சேக­ரித்­தார்.

தூத்­துக்­குடி மாவட்­டம், ஒட்­டப் பிடா­ரம் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் தேமு­திக வேட்­பா­ளர் ஆறு­முக நயி­னார், புதி­யம்­புத்­தூர் பேருந்து நிலை­யத்­துக்கு மாட்டு வண்­டி­யில் சென்று தீவிர பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வாக்கு சேக­ரித்­தார்.

விரு­து­ந­கர் மாவட்­டம், ஸ்ரீவில்லி புத்­தூர் தனித் தொகு­தி­யில் போட்டி யிடும் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் மாதவ ராவ், "சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக நான் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் எனது சம்­ப­ளம் அனைத்­தை­யும் தொகுதி மக்­க­ளின் வளர்ச்­சிக்­கா­கவே அர்ப்­ப­ணிப்­பேன்," என்­றார்.

சிறந்த கல்வி, தர­மான மருத்து வம் வேண்­டும் என்­றால் விவ­சாய சின்­னத்­திற்கு மக்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், படப்பை யில் பேசிய துணை முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம், திமுக ஆட்சி காலத்­தில் நிலவி வந்த மின்­சார தட்­டுப்­பாட்டை அதி­முக அரசு ஒரே ஆண்­டில் நீக்­கி­விட்­ட­தா­கக் கூறி­னார்.

போடி தொகு­தி­யில் போட்­டி­யி­டும் துணை முதல்­வரை ஆத­ரித்து திரைப்­பட இயக்­கு­நர் மனோ­பாலா வாக்­கு­சே­க­ரிப்­பில் ஈடு­பட்­டார். "அதி­மு­க­விற்கு வாக்களித்­தால் அடுத்த ஐந்தாண்டுகள் மக்கள் நிம்­ம­தி­யாக வாழ­லாம்," என்றார்.