தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளத் தொகுதியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுடன் மோது கிறார் ஹரி நாடார் என்ற வேட்பாளர்.
"கடந்த முறை நான் போட்டியிட்ட நாங்குநேரி தொகுதியைக் காட்டி லும் இந்த ஆலங்குளம் தொகுதி மக்களுக்கு என்னை மிகவும் பிடித்துப்போய்விட்டது.
"அதனால், என்னைக் காண தினமும் நிறைய பேர் குவிகின்றனர். அவர்கள் என்னை ஏமாற்றமாட்டார் கள். இந்த தேர்தலில் இந்த தங்க மகனுக்கு வெற்றி நிச்சயம்," என்கி றார் ஹரி நாடார்.
ஆலங்குளம் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு இடையே நேரடி பலப்பரிட்சை கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகளைக் குறிவைத்து 'பனங்காட்டு படை' என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் களம் இறங்கியுள்ளார்.
சென்னையில் வசிக்கும் இவர், பிரசாரத்திற்காக ஆலங்குளத்தில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.
தினமும் காலை, மாலையில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு குவியும் கூட்டத்தைக் கண்டு திமுகவின் பூங்கோதையும் அதிமுக வின் மனோஜ் பாண்டியனும் ஆடிப் போனதாகக் கூறப்படுகிறது.
இளையர்களின் கூட்டம் சாதிப் பாசத்தில் திரள்வதாகக் கூறப்பட்டா லும், ஹரி நாடாரின் பிரசாரத்தைக் காண பெண்களும் குவிகின்றனர்.
நடமாடும் நகைக்கடையைக் காணவே இப்படி மக்கள் கூட்டம் குவிவதாக அதிமுக, திமுக ஆதர வாளர்கள் விளக்கம் தருகின்றனர்.
நீண்ட முடியுடன் காணப்படும் ஹரி நாடார் அணிந்திருக்கும் நகை களின் எடை நாலே கால் கிலோ. 4,250 கிராம். 531 சவரன். போடும் நகைகளைத் தினமும் மாற்றுவது அவரது பொழுதுபோக்காக உள்ளது. அவரிடம் 1,400 சவரன் அல்லது 11 கிலோ, 200 கிராம் தங்க நகைகள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி ரூபாய் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"தங்க நகைகள் என்றால் எனக்கு உயிர். புது வடிவமைப்பில் நகைகள் வந்திருப்பது தெரிந்தால் அவற்றை உடனே வாங்கிப் போட்டு விடுேவன்," என்கிறார் ஹரி நாடார்.

