சென்னை: தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனா கிருமி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளதால், நாளை 22ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 'ப்ளஸ் 2' வகுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து பள்ளி களுக்கும் விடுமுறை விடப்படுவ தாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், புதுச்சேரியிலும் நாளை 22ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை பள்ளி களுக்கு விடுமுறை விடப்படுவ தாக மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,087 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இப்பாதிப்பு அதிகம் உறுதியாகி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு நேற்று இக்கிருமி பாதிப்பு உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூரில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட ஒரு பள்ளி மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம், இரு பள்ளிகளுக்கு அப ராதம் விதித்துள்ளது.
"பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வர வேண்டாம். போதிய ஒத்துழைப்பை கொடுத்தால், கிருமிப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்," என்று மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிருமிப் பரவலை முறியடிக்க பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலை மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு இணைய, 'டிஜிட்டல்' வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.
"கொரோனா வழிகாட்டி நெறி முறைகளின்படி பன்னிரண்டாம் வகுப்புகளை நடத்தலாம். அம்மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.

